தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உட்பட இருவர் அரசு பேருந்து மோதி உயிரிழப்பு

0 1489

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உட்பட இருவர் அரசு பேருந்து மோதி உயிரிழந்தனர்.

பூவாளி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர், அந்த வழியாக வந்த காரை சோதனை செய்வதற்காக திடீரென நிறுத்தினர். இதனால் காரின் பின்னால் அதிவேகமாக வந்துகொண்டிருந்த அரசு பேருந்து, கார் மீது மோதாமல் முந்தி செல்ல முயன்றபோது, காரின் முன்புறம் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கர்ணன், காவலர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் சந்தானக்குமார் மீது மோதியது.

இதில் கர்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பாலசுப்ரமணியன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலர் சந்தானக்குமார், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments