”திமுக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல” -மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

0 2854
”திமுக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல” -மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சிகலா விவகாரத்தில் அதிமுகவிற்குள் பூசல் இருப்பதாக விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சியாளர்களிடையே ஒற்றுமை இல்லாததைப் பயன்படுத்தி, மத்திய பாஜக அரசு தமிழகத்தின் உரிமைகளை பறித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, ஸ்ரீரங்கம்  ராஜகோபுரம் அருகே மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் திமுகவின் கொள்கை எனக் கூறிய மு.க.ஸ்டாலின், திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்றார்.

அதிமுக அரசு பாஜகவிற்கு இணக்கமாக இருந்து தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், சசிகலா விவகாரத்தில் அதிமுகவிற்குள் பூசல் இருப்பதாக விமர்சித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதே முதல் தீர்மானமாக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறினார்

கரூர் மாவட்டம் குளித்தலையில் திமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மு.க. ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். குளித்தலை பேருந்து நிலையத்திலிருந்து சுங்க கேட் வரை நடந்து சென்று அவர் வாக்கு சேகரித்தார். கடைக்காரர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பலரும் அவருடன் ஆர்வத்தோடு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments