வங்கதேசத்தில் பிரதமர் மோடி..! ஷேக் ஹசீனா வரவேற்பு

0 2074
வங்கதேசத்தில் பிரதமர் மோடி..! ஷேக் ஹசீனா வரவேற்பு

ங்கதேச விடுதலைப் பொன்விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை டாக்கா விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் சேக் ஹசீனா பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.

1971ஆம் ஆண்டு அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானில் மக்கள் மீதான பாகிஸ்தான் படையினரின் தாக்குதலை இந்திய ராணுவம் தலையிட்டு முறியடித்தது. 1971ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள் பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்கப்பட்டு வங்கதேசம் உருவானது.

இந்த விடுதலையின் பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டிச் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்குச் சென்றுள்ளார். கொரோனா சூழலுக்குப் பின் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

டாக்கா விமான நிலையத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா பூங்கொத்துக்கொடுத்து வரவேற்றார். டாக்காவில் உள்ள தேசியத் தியாகிகள் நினைவிடத்தைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments