தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1129
தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

மிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படும். தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், ஏப்ரல் 2-ம் தேதி முதல் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments