மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 670 புள்ளிகள் உயர்வு

0 3343
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 670 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் அறுநூறு புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நேற்று வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 740 புள்ளிகள் சரிந்து 48 ஆயிரத்து 440 ஆக இருந்தது.

இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. பகல் 11.50 மணியளவில் மும்பை பங்குச்சந்தை பங்கு விலைக் குறியீடு சென்செக்ஸ் 670 புள்ளிகள் உயர்ந்து 49 ஆயிரத்து 110 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 205 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரத்து 530 ஆக இருந்தது. உலோகத் தொழில், வாகனத் தயாரிப்பு, நிதி நிறுவனங்களின் பங்குவிலை 6 விழுக்காடு வரை உயர்வடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments