கோவை: வாய், கால்களை கட்டிப் போட்ப்பட்ட நாய்களை மீட்ட மனிதாபிமானமுள்ள இளைஞர்கள்!

0 4887
மீட்கப்பட்ட நாய்கள்

உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் வாய், கால்கள் கட்டி கொடுமைப்படுத்தப்பட்ட 2 நாய்களை மீட்டு விலங்குகள் நல அமைப்பினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை அவினாசி சாலையிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இரண்டு நாய்களை உயிருக்கு ஆபத்தான முறையில் கட்டி வைக்கபட்டுள்ளதாக மாணவர்கள் சிலர், விலங்குகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற விலங்குகள் நல அமைப்பினர் இரண்டு நாய்களின் வாய் மற்றும் காலகளை கட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தங்களை மீட்க வந்தவர்களை கண்டு நாய்கள் தவண்டு ,தவண்டு வந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். நாய்களின் கண்களில் நீர் திரண்டு இருந்ததை கண்டு மீட்க சென்றவர்களும் மிகுந்த சோகத்துக்குள்ளாகினர்.

பின்னர் நாய்களை மீட்டு சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள மாநகராட்சி விலங்குகள் மையத்திற்கு எடுத்துச்சென்றனர் . நாய்களின் கால்கள் நீண்ட நேரம் இறுக்கி கட்டப்பட்டிருந்ததால் ரத்த ஓட்டமின்றி கால்கள் வீங்கி போயுள்ளன.நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விலங்குகள் நல அமைப்பினர் தெரிவித்தனர். சமீபத்தில்தான், விலங்குகளை கொடுமைப்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், யாரும் சட்டத்துக்கு பயந்தது போல தெரியவில்லை. இத்தகையை கொடூரச் செயல்களை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென விலங்குகள் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments