சென்னையில் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டு பெறும் பணி துவக்கம்

0 2102
சென்னையில் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டு பெறும் பணி துவக்கம்

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியது.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 7300 பேரின் விண்ணப்பம் மட்டுமே ஏற்று கொள்ளப்பட்டன. இதற்காக நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு குழுக்கள் வீடு வீடாக சென்று தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் பணியை தொடங்கியுள்ளனர்.

இந்த குழுக்களில் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர், காவலர், வீடியோ ஒளிப்பதிவாளர் என 6 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பணியின்போது கொரோனாவை கருத்தில் கொண்டு கூட்டம் சேராமல் இருப்பதற்கும் போதுமான வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தபால் ஓட்டு அளிக்கும்போது, ஒரு வேட்பாளர் சார்பில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சென்னையில் இன்று முதல் 30-ந்தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளோருக்கான வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்கள், காவல்துறை, ராணுவத்தினர் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 9000 பேர் தபால் வாக்குச் செலுத்துகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர், மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் என 1886 பேர் தபால் மூலம் வாக்கு செலுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments