உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா அபாரம்..! ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்களை வென்று பட்டியலில் முதலிடம்

0 3920
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா அபாரம்..! ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்களை வென்று பட்டியலில் முதலிடம்

லக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. டெல்லியில் நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் குழு பிரிவில் இந்திய வீராங்கனைகள் சிங்க்கி யாதவ், மானு பக்கர், ரகி சர்னோபாத் ஆகியோர் 17-க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் போலாந்து குழுவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனர்.

அதேபோல் நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று வடிவிலான குழு பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும், ஸ்ரேயா சக்சேனா, காயத்ரி நித்தியானந்தம் 43-க்கு 47 என்ற புள்ளிகள் கணக்கில் போலாந்து அணியிடம் தோல்வியை தழுவி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இதன் மூலம் பதக்க பட்டியலில் 10 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உள்பட 21 பதக்கங்களை வென்று இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments