ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமிருந்து தப்பிக்க லஞ்சமாக வாங்கிய பணத்தை தீயிட்டு எரித்த தாசில்தார் கைது

0 2323
ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமிருந்து தப்பிக்க லஞ்சமாக வாங்கிய பணத்தை தீயிட்டு எரித்த தாசில்தார் கைது

ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க 20 லட்சம் ரூபாயை தீயிட்டு எரித்த தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

ஷிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்த தாசில்தார் கல்பேஷ் குமார் என்பவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரையடுத்து, அவரது வீட்டைச் சோதனையிட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அவர்களைக் கண்ட கல்பேஷ் குமார், வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு பீரோவில் வைத்திருந்த ரூபாய் தாள்களை தீயிட்டு எரிக்கத் தொடங்கினார்.

இதனைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து வீட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் கல்பேஷ் குமாரோ சாவகாசமாக அனைத்து ரூபாய் தாள்களையும் எரித்து சாம்பலாக்கினார்.

இறுதியில் அவரைச் சுற்றி வளைத்த போலீசார் பார்த்தபோது அவர் சாம்பலாக்கிய பணம் 15 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments