காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு CRPF வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு CRPF வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான லாவோ போரா என்ற இடத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
இதில் உதவி ஆய்வாளர் மங்காராம் தேவ் பார்மா, காவலர் அசோக்குமார் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடிய நிலையில், அவர்களைப் பிடிக்க கூடுதல் படையினர் லாவோ போராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Comments