அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்வு

0 2580
அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்வு

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் முதற்கட்டத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் முடிவடைந்தது.

126 இடங்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு முதல்கட்டமாக 47 தொகுதிகளில் நாளை முதற்கட்டத் தேர்தல் நடக்க உள்ளது.

இதில், ஆளும் பாஜக 39 தொகுதிகளிலும், அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அசாம் கணபரிஷத் 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இதேபோல் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு முதல் கட்டமாக, 30 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடக்கிறது.

இந்த மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இவ்விரு மாநிலங்களிலும் நாளை முதற்கட்டத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அப்பகுதிகளில் நேற்று மாலையுடன் பரப்புரைகள் ஓய்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments