புதுக்கோட்டையில் வாகன சோதனையின் போது 6.83 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

0 802
புதுக்கோட்டையில் வாகன சோதனையின் போது 6.83 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டையில், கொரியர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஆறே முக்கால் கிலோ தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பட்டுக்கோட்டையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கொரியர் வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்ட போது உரிய ஆவணமின்றி 6 கிலோ 843 கிராம் தங்க நகைகள் எடுத்து செல்லப்படுவது தெரியவந்தது.

அதன் மதிப்பு 3 கோடியே 17 லட்ச ரூபாய் எனத் தெரிவித்த அதிகாரிகள், நகைகளை புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments