தமிழகத்தில் பல விரைவு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

0 2046
தமிழகத்தில் பல விரைவு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

மிழகத்தில் பல்வேறு விரைவு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கோவை - சென்னை இடையே செவ்வாய் தவிர 6 நாட்கள் இயங்கும் சதாப்தி விரைவு ரயில், கோவை - பெங்களூர் இடையே புதன் தவிர 6 நாட்கள் இயங்கும் உதய் விரைவு ரயில் ஆகியன ஏப்ரல் 10 முதல் இயக்கப்பட உள்ளன.

இதேபோல் மதுரை - சென்னை எழும்பூர் வாரம் இருமுறை விரைவு ரயில், கோவை - சென்னை சென்ட்ரல், புதுச்சேரி - மங்களூர், புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே முன்பதிவில்லா விரைவு ரயிலும் ஏப்ரல் 10 முதல் இயக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments