டெல்லி: இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு

0 903
டெல்லி: இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் நான்கு மாதங்களாகும் நிலையில் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நான்குமாநிலங்கள் மற்றும் புதுச்சேரி தவிர்த்து இதர பகுதிகளில் காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சந்தைகள், கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் டெல்லியில் இன்று போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments