”நலத்திட்டங்களைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்” - முதலமைச்சர்

0 2010
”நலத்திட்டங்களைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும்” - முதலமைச்சர்

மிழக சாலை மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாகத் தெரிவித்த முதலமைச்சர், கொரோனா காலத்தில் ரேஷனில் இலவசப் பொருட்கள் வழங்கியதாகவும், ஒரே ஆண்டிற்குள் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 4 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக மதுரையில் முனிச்சாலை, புதூர் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். ஆரப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, படிப்படியாக உயர்ந்து முதலமைச்சர் பதவிக்கு வந்ததாகவும், பதவியேற்ற பின் ஒருநாள்கூட விடுமுறை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments