”இந்தியா இதுவரை 75 நாடுகளுக்கு 6 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்து டோஸ்களை அனுப்பி வைத்துள்ளது” -மத்திய அரசு விளக்கம்

0 1620
”இந்தியா இதுவரை 75 நாடுகளுக்கு 6 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்து டோஸ்களை அனுப்பி வைத்துள்ளது” -மத்திய அரசு விளக்கம்

கோவிட் 19 தடுப்பூசியை இதுவரை 75 நாடுகளுக்கு இந்தியா ஆறு கோடிக்கும் மேற்பட்ட டோஸ்களை அனுப்பி வைத்துள்ளது.

இதில் கணிசமான பகுதி நல்லெண்ண அடிப்படையில் இலவசமாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் வர்த்தக ரீதியாகவும் கோவிட் 19 மருந்து அனுப்பிவைக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

உள்நாட்டுத் தேவைக்காக ஏற்றுமதியின் மீது கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏற்றுமதியை இந்தியா நிறுத்தவே இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இனி வரும் வாரங்களிலும் கொரோனா தடுப்பு மருந்து தேவை இருக்கும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments