பாஜகவையும் பிரதமரையும் தரக்குறைவாக விமர்சிப்பதாக மம்தா பானர்ஜியை கண்டித்து அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு

பாஜகவையும் பிரதமரையும் தரக்குறைவாக விமர்சிப்பதாக மம்தா பானர்ஜியை கண்டித்து அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக மீது தரக்குறைவான விமர்சனம் செய்ததைக் கண்டித்து அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.
பிஷ்ணுபுர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட காவியுடை குண்டர்கள் மாநிலத்தின் கலாசாரத்தை சீரழிப்பதாக விமர்சித்திருந்தார்.
மேலும் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையிலும் விமர்சித்திருந்தார். ஒரு கட்சியின் தலைவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் போன்ற பொறுப்பான ஒரு நபர் இப்படி பேசுவதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மமதா பேசிய வீடியோ காட்சிகளுடன் தேர்தல் ஆணையத்திடம் பாஜக தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.
Comments