தலைமை நேர்மையாக இருந்தால், அடிமட்டம் வரையில் நேர்மை இருக்கும் - கமல்ஹாசன்

0 1513
தலைமை நேர்மையாக இருந்தால், அடிமட்டம் வரையில் நேர்மை இருக்கும் - கமல்ஹாசன்

லைமை நேர்மையாக இருந்தால், அடிமட்டம் வரையில், அனைவரும் நேர்மையாக இருப்பார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பழ.கருப்பையா, ஆயிரம் விளக்கு தொகுதி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஷெரிப், எழும்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி, மயிலாப்பூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீப்ரியா ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாம் தனது சொந்த பணத்தில் தான் ஹெலிகாப்டரில் செல்வதாக தெரிவித்த கமல், மனிநேயம், சாதிபேதமற்ற தன்மை குறித்து தமக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என்றார். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் என, கமல் வாக்குறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments