தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது; ஒரே நாளில் 1,779 பேர் பாதிப்பு..!

0 3099
தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்து 27பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில்11 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில், மேலும் 664பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கும், கோயம்புத்தூரில் 153 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும், திருவள்ளூரில் 89 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர, காஞ்சிபுரம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments