தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி.! முதலமைச்சர் பரப்புரை.!

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில், சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதால் தான், நமது மாநிலத்தில் தொழில் தொடங்க, பெரிய, பெரிய நிறுவனங்கள் பேரார்வம் காட்டுவதாகவும், அவர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும், மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அதிமுக ஆட்சியால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக குறிப்பிட்ட முதலமைச்சர், அனைவரும் நிம்மதியாக தொழில் செய்யும் மகிழ்ச்சியான ஆட்சி நடைபெறுவதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாலேயே, பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாம், தமிழ்நாட்டைத் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலன்களையும் பார்த்துப் பார்த்து அரசு திட்டங்களை நிறைவேற்றியதாக குறிப்பிட்ட இ.பி.எஸ், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதிபடக் கூறினார்.
விவசாயிகளின் நலன் காக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், மின்சாரத்துறையில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு, மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Comments