இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க ? தேர்தலில் இருந்து தொடங்குகிறது

0 2263
இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க ? தேர்தலில் இருந்து தொடங்குகிறது

தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடங்கி வாக்கு சேகரிப்பது வரை அனைத்தும் சாதியை முன்னிருத்தியே கட்சிகள் அரசியல் நடத்துவது, சில அரசியல் கட்சியினரின் பேச்சில் இருந்து வெளிப்பட்டு இருக்கின்றது

இப்பல்லம் யார் சார் சாதி பார்க்கிறார்கள் ? என்று சிலர் கேட்டாலும், பள்ளிக்கூடத்தில் கேட்கப்படும் சாதி சான்று தொடங்கி பல சூழ்நிலைகளிலும் சாதி என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

நடிகர் கார்த்திக்கின் மக்கள் உரிமைகாக்கும் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் துர்க்கை லிங்கம் தாங்கள் சார்ந்த சமுதாயத்துக்காக, இந்த தேர்தலில் அமமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்

அதே போல பரமக்குடி திமுக வேட்பாளரை ஆதரித்து மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் போது, தனது சாதியினர் வசிக்கும் பகுதிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள ராஜகண்ணப்பன் இன்னும் இரு தினங்களில் வர இருப்பதாக மக்கள் மத்தியில் திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்

எல்லாவற்றுக்கும் மேல் தமிழகத்தில் உள்ள ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் நாசருக்கு ஆதரவாக தெலுங்கு மொழியில் வீதி வீதியாக பிரச்சாரம் மேற்க் கொள்ளப்பட்டது

சாதி, இனம், மதம், மொழியை வைத்து நடக்கின்ற அத்தனை சர்ச்சைக்களுக்கும் ஆரம்பபுள்ளி அரசியல் என்பதை இந்த காட்சிகள் நமக்கு உணர்த்தின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments