மும்பையில் கொரோனா பரவல் காரணமாக ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை

0 1101

கொரோனா தொற்று பரவல் காரணமாக மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருகிற 28 மற்றும் 29-ந் தேதிகளில் நாடெங்கும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது வட மாநிலங்களில் வெட்டவெளியில் ஒன்று கூடி ஹோலிகா எரிப்பிலும், அடுத்த நாள் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசியும் கொண்டாடுவர்.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தனியார் மற்றும் பொது இடங்களில் எங்கும் ஹோலி கொண்டாட்டங்கள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோல புனேவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments