செல்போனில் வைரல் வீடியோ...தலைமுடியை Straighten செய்ய முயற்சி செய்த சிறுவன் பலி

0 6483

கேரளாவில் 12 வயது சிறுவன் ஒருவன் , சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோவை பார்த்து, தலைமுடியை straighten செய்ய முயலும்போது பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவீனக் காலத்தில், பெற்றோரின் அன்றாட சிக்கல்களில் ஒன்று, குழந்தைகளிடமிருந்து செல்போனை பிரிப்பது. பெற்றோர்கள் சொல்லச் சொல்லக் கேட்காமல் வீட்டில் இருக்கும் பிள்ளைகள், செல்போன் கேம்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் உடல் அளவிலும் மன அளவிலும் பிள்ளைகளுக்குப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில சிறுவர்கள் அடிமைத் தனத்தின் உச்சமாக, கேம்-ல் தோற்றுப்போனால் வீட்டை விட்டுச் செல்வது, தற்கொலை செய்து கொள்வது போன்ற துயர முடிவை எடுக்கின்றனர். இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறி ஆகிறது எனப் பெற்றோர் பலரும் மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், திடீரென தலைதூக்கிய கொரோனா பெற்றோர்களின் போராட்டத்தை மேலும் கடினமாகிவிட்டது. கொரோனா பரவலைத் தடுக்க, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் எடுக்கப்பட்டது. அதனால், பிள்ளைகளுக்கு செல்போன் தரவேண்டிய சூழலுக்குப் பெற்றோர்கள் தள்ளப்பட்டனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள வெங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் . இவருக்கு 12 வயதில் சிவநாராயணன் என்ற மகன் உள்ளார் . சிவநாராயணன், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின் பெற்றோர், பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதில் அடிக்கடி சமூக வளைத்த பக்கத்தில் பகிரப்படும் வீடியோக்களை அந்த சிறுவன் பார்த்து வந்துள்ளான். அந்த வகையில், தலை முடியை straighten செய்யும் வீடியோவை இணையத்தில் பார்த்துள்ளான் சிவநாராயணன்.

இந்நிலையில், சொந்த வேலையாகப் பெற்றோர் வெளியில் செல்ல, பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ளான் சிவநாராயணன். திடீரென குளியல் அறைக்குச் சென்ற அவன், தனது முடியை straighten செய்யும் முயற்சியில், தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்றவைத்துள்ளான். நெருப்பு உடலெங்கும் பரவ, பலத்த தீ காயங்களுடன் சிவநாராயணன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்த்து, தானும் அதே போல் செய்ய முயற்சி செய்யும்போது சிறுவன் ஒருவன் பலியான சம்பவமும் வெங்கனூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments