காசு வாங்கிட்டு வரவேற்க மறந்த அமமுக தொண்டர்ஸ்..! ரூ.2 ஆயிரத்துக்கு சிறுவர்கள் தான்..!
ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அமமுக வேட்பாளரை வரவேற்று ஆரத்தி எடுத்து வாழ்த்து கோஷம் எழுப்ப, 2 ஆயிரம் ரூபாய் முன்பணம் வழங்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் மட்டும் கொடியுடன் நின்றதால் வேட்பாளர் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பவானி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பவானி ராதா என்கிற ராதாகிருஷ்ணன், அங்குள்ள கண்ணடி பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்ய தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை வரவேற்க கட்சியினர் எவரும் இல்லை 10 சிறுவர்கள் மட்டும் வேட்பாளரை பார்த்து நமுட்டு சிரிப்புடன் கையசைத்துக் கொண்டு நின்றனர்.
இதை பார்த்து டென்சனான ராதாகிருஷ்ணன், தன்னை வரவேற்க முன்பணம் கொடுத்த தொண்டரை அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொறுப்பாளரான, அந்த அப்பாவி தொண்டரோ, நீங்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய்க்கெல்லாம் பெரிய கூட்டம் வராது என்று சொன்னார்.
அப்புறம் ஊரில் இருந்து சில மூதாட்டிகளை அழைத்து வந்து அவர்களிடம் துண்டுபிரசுரத்தை வழங்குவது போலவும், அவர்களை அரவணைப்பது போலவும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் வேட்பாளர் ராதாகிருஷ்ணன்.
குழந்தைகள் கையில் தட்டுக்களை கொடுத்து அவருக்கு ஆரத்தி எடுக்க வைத்தனர். இதையடுத்து அந்த ஊரில் இருந்து புறப்பட்ட ராதாகிருஷ்ணன், வழியில் மற்றோரு ஊரில் பிரச்சாரத்தை வேடிக்கை பார்க்க நின்ற பெண்களிடம் இறங்கிச்சென்று வாக்கு சேகரித்தார். அந்தவழியாக வந்த ஒரு மூதாட்டியிடம் காலில் விழுந்து வாக்கு கேட்க, அந்த மூதாட்டி வைத்த கோரிக்கையை வெற்றி பெற்று வந்து செய்வதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
Comments