புதுச்சேரியில், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள்ஒதுக்கீடு நிராகரிப்பு

0 4550
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப் புதுச்சேரி அரசு பரிந்துரைத்ததை நிராகரித்து விட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப் புதுச்சேரி அரசு பரிந்துரைத்ததை நிராகரித்து விட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப் புதுச்சேரி அமைச்சரவை முடிவெடுத்தது. இதை எதிர்த்து மாணவி திவ்யதர்சினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், புதுச்சேரி அரசின் முடிவு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசின் பரிந்துரையை நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் முதல் வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments