நடைபெறுவது தேர்தல் பொதுக்கூட்டம் அல்ல, வெற்றி விழாக் கூட்டம் - மு.க.ஸ்டாலின்

0 1816
திமுக இந்து விரோத கட்சி என பொய்ப்பிரச்சாரம் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், மத உணர்வை தூண்டி வெற்றிபெற்று விடலாம் என நினைக்கும் சக்திகளின் எண்ணம் ஒருபோதும் தமிழகத்தில் நிறைவேறாது என கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை சுட்டிக்காட்டிய அவர், நடைபெறுவது தேர்தல் பொதுக்கூட்டம் அல்ல, வெற்றி விழாக் கூட்டம் என்றார்.

தேர்தல் அறிக்கையில் ஆலயங்கள் கும்பாபிஷேகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் என அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், தமிழக கோவில்கள் பழமை மாறாமால் சீர்செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை எடுத்துரைத்தார்.

பதவி பவிசுக்காக அல்ல, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை காக்க தேர்தல் போரில் திமுக வெற்றிபெற்றாக வேண்டாம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையையும், தமது 7 வாக்குறுதிகளையும் எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், உணவு, உறக்கத்தைவிட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தனக்கு முக்கியமானது என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments