பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை.. பார்த்தசாரதிக்கு தொற்று உறுதி

0 2820
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரேமலதாவின் சகோதரர் சுதீஷிற்கு கொரோனா உறுதியானதை அடுத்து, விருதாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதாவை சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைக்கு அழைத்தனர்.

முதலில் வர மறுத்த அவர் பிறகு நேற்று பிற்பகலில் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் விருகம்பாக்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பார்த்தசாரதி கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததை அடுத்து தனியார் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments