நில அபகரிப்புக்கு முற்றுப்புள்ளி - முதலமைச்சர்

0 1937
திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட 14,000 ஏக்கர் நிலங்களை அப்பாவிகளுக்கு மீட்டுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ அதிமுகவை ஆதரிக்குமாறு கூறி பிரச்சாரம் செய்தார்.

திமுக ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட 14,000 ஏக்கர் நிலங்களை அப்பாவிகளுக்கு மீட்டுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ அதிமுகவை ஆதரிக்குமாறு கூறி பிரச்சாரம் செய்தார். 

மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து, ஒத்தக்கடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வியாபாரிகள் அனைவரும் நிம்மதியாக தொழில் செய்யும் மகிழ்ச்சியான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

மின்துறையில் தனிக் கவனம், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு காரணமாக பெரிய பெரிய தொழில்கள் எல்லாம் தமிழகத்தை தேடி வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

ஏழை மக்களுக்கு பார்த்து பார்த்து உயிரோட்டமான திட்டங்களை செயல்படுத்துவதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், வீடுகள்தோறும் துணி துவைக்கும் பெண்களின் வேலைப்பளுவை குறைக்கவே இலவச வாஷிங் மெஷின் திட்டம் என்றார்.

மேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளானை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடை மதிப்பு விவசாயிகள் மத்தியில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது என்றார்.

இதைத் தொடர்ந்து சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு ஆதரவாக அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments