இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: தடுப்பு மருந்து ஏற்றுமதியை நிறுத்திய சீரம் நிறுவனம்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்வதற்காக வெளிநாடுகளுக்குப் பெருமளவிலான கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதியை சீரம் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த இருவாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வரும் சீரம் நிறுவனம் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் குறைந்த வருமானம் உள்ள 64 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படும் என யூனிசெப் தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்துகளைக் கூடிய விரைவில் அனுப்பி வைக்க இந்திய அரசுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments