தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களே 2 ஆவது டோசுக்கான தேதியை மக்களே தீர்மானித்துக் கொள்ளலாம் - ஆர்.எஸ்.சர்மா

நேற்று மட்டும் ஒரே நாளில் 10 லட்சத்து 65 ஆயிரத்து 21 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 10 லட்சத்து 65 ஆயிரத்து 21 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை நடத்தப்பட்ட கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 23 கோடியே 75 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பூசி திட்டம் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும் என இனிமேல் கோவின் செயலி அல்லது இணையதளத்தில் தாமாகவே அறிவிக்கப்படமாட்டாது.
தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களே அதற்கான தேதியை அரசு பரிந்துரைத்த காலக்கெடுவிற்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என தடுப்பூசிக்கான அதிகாரமிக்க அரசு குழுவின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.
Comments