எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

0 1139
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து 5 விசைப் படகுகளில் மீனவர்கள் 40 பேர் கடலுக்கு நேற்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே இன்று காலை மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, நடுக்கடலில் வைத்து 5 படகுகளையும் சிறைபிடித்ததாக கூறப்படுகிறது.

அதில் இருந்த மீனவர்கள் 40 பேரையும் கைது செய்து காரை நகர் முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments