முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிப்பொருட்களுடன் கார் சிக்கிய விவகாரம் : கார் உரிமையாளரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது - என்.ஐ.ஏ.

0 944
முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிப்பொருட்களுடன் கார் சிக்கிய விவகாரம் : கார் உரிமையாளரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது - என்.ஐ.ஏ.

மும்பை காவல்துறையை உலுக்கிய மன்சுக் ஹிரேன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸே உள்ளிட்ட 3 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சச்சின் வாசே தான்  மன்சுக் ஹிரானியைக் கொலை செய்ய  மும்பை காவல்துறை தலைமையகத்தில் வைத்து சதித் திட்டம் தீட்டியதாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மன்சுக் ஹிரானி என்பவரின் ஸ்கார்ப்பியோ கார் கடத்தப்பட்டு வெடிப்பொருட்களுடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லம் அருகே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து தேடப்பட்டு வந்த கார் உரிமையாளரான மன்சுக் ஹிரேன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவர் உடல் தானே ஆற்றங்கரையில் இருந்து மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments