பிரேசிலில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா : ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு

பிரேசிலில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா
பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் பிரேசில், இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.
தற்போது கொரோனாவால் உலகிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 22 லட்சத்து 27 ஆயிரம் பேர் கொல்லுயிரியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 244 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.
Comments