இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்

0 5348
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் போது ஸ்ரேயஸ் அய்யருக்கு இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் செய்ததில் எலும்பு இடம் மாறி உள்ளதும் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒருநாள் மற்றும் ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் விளையாடமாட்டார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் இருந்து முதல் வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ள நிலையில் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை ரிஷாப் பண்ட், அஸ்வின், அல்லது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் ஆகியோரில் ஒருவர் கவனிப்பார் என தெரிகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments