ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை: கேரளாவில் பாஜக தேர்தல் வாக்குறுதி

ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை: கேரளாவில் பாஜக தேர்தல் வாக்குறுதி
சபரிமலையின் மரபுகள் காப்பாற்றப்படும் என்றும், மதமாற்றத் தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று கேரள சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
கேரள சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா ஆறு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நிலமற்ற ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட குடும்பத்திற்கும் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments