மும்பையில் முதல் முறையாக ஒரே நாளில் 5,185 பேருக்கு கொரோனா

மும்பையில் முதல் முறையாக ஒரே நாளில் 5,185 பேருக்கு கொரோனா
மும்பையில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 நேரத்தில் 5 ஆயிரத்து 185 பேருக்கு பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வரும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஹோலிக் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் நிலைகுலைந்து உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 31 ஆயிரத்து 855 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மேலும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு உருமாறிய தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில நிலைமை மிகுந்த கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Comments