தெலுங்கானா மாநிலத்தில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் தெலுங்கானா வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அங்குள்ள யாதத்ரி மாவட்டம் படாங்கி சுங்கச்சாவடி அருகே ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டதில், 26 கிலோ எடையுள்ள, சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் காரின் டேஷ் போர்டில் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் வந்த மூன்று பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
Comments