தான் முன்கூட்டியே சொன்னதை முதலமைச்சர் தற்போது செய்து வருகிறார் - மு.க. ஸ்டாலின்

0 1880
தான் முன்கூட்டியே சொன்னதை முதலமைச்சர் தற்போது செய்து வருகிறார் - மு.க. ஸ்டாலின்

தான் முன்கூட்டியே சொன்ன பல விஷயங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது செய்து வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தமிழக அரசு கூறியிருந்த நிலையில், ஏற்கனவே உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் இன்னும் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்பட்டதை தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

கொரோனா தொடர்பான தமது எச்சரிக்கைகள் உள்ளிட்ட தாம் விடுத்த பல கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றும், ஆனால் பின்னர் அவற்றை செயல்படுத்தியதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மக்களுடைய அடிப்படை பிரச்னைகளை 100 நாட்களில் தீர்த்து வைப்பதாக தான் முன்கூட்டியே கூறியதாகவும், அதன்பிறகே, முதலமைச்சர் 1100 என்ற எண்ணைக் கொடுத்து மக்கள் குறைகளை சொல்லலாம் என்ற திட்டத்தை அறிவித்ததாகவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மலட்டாற்றின் குறுக்கே பாலங்கள், விக்கிரவாண்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, சாலமேடு அருகே ரயில்வே மேம்பாலம், விழுப்புரத்தில் காகிதத் தொழிற்சாலை, நெல் கொள்முதல் மையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments