தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி.! இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ் புகழாரம்.!

0 2263

தமிழ்நாட்டில், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று, நீடித்த நிலையான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார். ஆளும் அதிமுக அரசின் சாதனை எடுத்துக்கூறி வாக்குசேகரித்த ஓ.பி.எஸ், தமிழ்நாட்டில், மக்களுக்கு குறைவில்லா திட்டங்களை வழங்கி, நல்லாட்சி புரிபவர் எடப்பாடி பழனிசாமி என புகழாரம் சூட்டினார். 

மேலும், சங்கிரி, ஓமலூர், மேட்டூர் தொகுதிகளில் போட்டியிடும், அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில், ஓ.பன்னீர்செல்வம் பரப்பரையில் ஈடுபட்டார். கடந்த 10 ஆண்டுகளில், ஆளும் அதிமுக ஆட்சியில் 26 ஆயிரம் தொழிற்சாலைகள் தொடங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருப்பதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், சங்கிரி, ஓமலூர், மேட்டூர் தொகுதிகளில் போட்டியிடும், அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, எடப்பாடி பேருந்து நிலைய பகுதியில், ஓ.பன்னீர்செல்வம் பரப்பரையில் ஈடுபட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில், ஆளும் அதிமுக ஆட்சியில் 26 ஆயிரம் தொழிற்சாலைகள் தொடங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்திருப்பதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக, ஓ.பி.எஸ் வாக்கு சேகரித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments