ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை-மு.க.ஸ்டாலின் உறுதி

0 1880
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு பத்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை என்பது திமுகவின் அடிப்படை கொள்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆத்தூர், திட்டக்குடி, விழுப்புரம் ஆகிய இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது போல் திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன், விவசாய கடன், நகைக் கடன், கூட்டுறவு வங்கிகடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என முக.ஸ்டாலின் உறுதியளித்தார்.

அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை என்பது தி.மு.க.வின் அடிப்படை கொள்கை என்ற அவர், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலை வாய்ப்பினை தமிழகத்திற்கு வழங்க திமுக ஆட்சிக்கு வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். 

பிரசார பயணத்தின் போது  தலைவாசல் பகுதிக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினியுடன் தலைவாசல் சந்தைப் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று, வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்த பிரசாரத்தின் போது அவர், சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் சின்னதுரை, கெங்கவல்லி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, ரிஷிவந்தியம் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதய சூரியன், உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளர் மணிகண்ணன், கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

இதே போன்று திட்டக்குடி தனி தொகுதி திமுக வேட்பாளர் கணேசன், விருத்தாசலம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், நெய்வேலி திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன், பண்ருட்டி த.வா.க வேட்பாளர் வேல்முருகன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன், விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தி, திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி, வானூர் தனி தொகுதி விசிக வேட்பாளர் வன்னியரசு ஆகியோருக்கும் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments