தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் 1500 -யை தாண்டியது

0 3104
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் 1500 -யை தாண்டியது

தமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு, 1,600ஐ தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,636 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 1023 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகரில், மேலும் 633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 178 பேருக்கும், கோயம்புத்தூரில் 147 பேருக்கும், திருவள்ளூரில் 86 பேருக்கும், தஞ்சாவூரில் 72 பேருக்கும், புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. விமானங்கள் மூலம், ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து வந்த நபருக்கும், மும்பையில் இருந்தும் வந்த நபர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் இருந்து தென்காசிக்கு வந்த 2 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments