தேர்தல் பிரசாரத்திற்காக அடுத்தடுத்து தமிழகம் வரும் பா.ஜ.க. தலைவர்கள்....

0 2579
தமிழகத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பா.ஜ.க முன்னணி தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர்.

தமிழகத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பா.ஜ.க முன்னணி தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வர உள்ளனர்.

வருகிற 27 ஆம் தேதி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவை தெற்கு மற்றும் சென்னையில் துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

வருகிற 31 ஆம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஊட்டி மற்றும் தளி தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். அதே நாளில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விருதுநகர், கோவை தெற்கு தொகுதிகளில் பரப்புரை செய்யவுள்ளார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி அரவக்குறிச்சியிலும், 3 ஆம் தேதி ராமநாதபுரம், நெல்லை, சென்னையிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரிக்கிறார். இந்த தகவலை மாநில பாஜ.க வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments