ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி வேலை தேடிய 750 பேரை ஏமாற்றி ரூ.6 கோடி சுருட்டிய 2 பேர் கைது

0 5785
ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி வேலை தேடிய 750 பேரை ஏமாற்றி ரூ.6 கோடி சுருட்டிய 2 பேர் கைது

ன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி வேலை தேடிய 750 பேரை ஏமாற்றி 6 கோடி ரூபாய் சுருட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த எலெக்ட்ரிசியன் அசோக்குமார், தன்னிடம் பத்தரை லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோசடிக்கு பயன்படுத்திய செல்போன் சிக்னல்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்ததில் சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த செய்யது அபுதாகிர் மற்றும் கடலூரைச் சேர்ந்த அலி ஹுசைன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை நிறுவனத்தை உருவாக்கி, பங்கு வர்த்தகம் குறித்து தெரியாத நபர்களைத் தேர்ந்தெடுத்து மோசடியை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் பணத்தை இழந்த 60-க்கும் மேற்பட்டோர் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் விசாரணை நடப்பதாக போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments