தமிழகத்தில் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர் - தேர்தல் ஆணையம்

தமிழகம் முழுவதும் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 20 ம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 391 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 40 லட்சத்து 57 ஆயிரத்து 61 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 30ஆயிரம் வாக்காளர்களும் உள்ளனர்.
Comments