"தேசியக் குடிமக்கள் பதிவேட்டை வங்கத்தில் செயலாக்க முடியாது" - மம்தா பானர்ஜி

0 864
"தேசியக் குடிமக்கள் பதிவேட்டை வங்கத்தில் செயலாக்க முடியாது" - மம்தா பானர்ஜி

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஒருபோதும் செயல்படுத்த விடப்போவதில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பங்குராவில் திரிணாமூல் காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அசாமில் பாஜக அரசு 14 லட்சம் வங்காளிகளின் பெயரைத் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்காமல் விட்டுவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் தான் ஆட்சியில் இருக்கும் வரை தேசியக் குடிமக்கள் பதிவேட்டைச் செயல்படுத்த விடப்போவதில்லை என அவர் தெரிவித்தார். வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்களை அழைத்து வந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments