புதுச்சேரியில் களைகட்டிய வேட்பாளர்கள் பரப்புரை.. மக்களிடம் வாக்குச் சேகரிப்பு..!

0 548
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வீதிவீதியாகப் பரப்புரை செய்து பொதுமக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்தனர்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வீதிவீதியாகப் பரப்புரை செய்து பொதுமக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்தனர்.

புதுச்சேரி பாகூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சோமநாதன் பனித்திட்டு, ஆலடிமேடு, வம்பாபேட்டை ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

மணவெளி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அனந்தராமன் நோணாங்குப்பத்தில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

முன்னாள் அமைச்சரும் ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கந்தசாமி அரங்கனூர், செழியமேடு, ஆதிங்கப்பட்டு ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்து வாக்குச் சேகரித்தார்.

பாஜக மாநிலப் பொதுச்செயலரும் மணவெளி தொகுதி வேட்பாளருமான ஏம்பலம் செல்வம் நல்லவாடு, சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று தாமரைச் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பாகூர் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை, திருமால் நகர் பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர் பொன்னம்மாள் வாக்குச் சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments