சட்டமன்ற தேர்தலை ஒட்டி வருகிற 4-ம் தேதி காலை முதல் 6-ம் தேதி இரவு வரை டாஸ்மாக் கடைகள் அடைப்பு

0 2379
சட்டமன்ற தேர்தலை ஒட்டி வருகிற 4-ம் தேதி காலை முதல் 6-ம் தேதி இரவு வரை டாஸ்மாக் கடைகள் அடைப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிபடுத்தும் விதமாக, வருகிற 4-ம் தேதி காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றாலோ, கடத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments