பண்டிகைகளின் போது மக்கள் பொது இடங்களில் கூடுவதை தடுக்க உள்ளூர் கட்டுப்பாடுகள் அவசியம் - மத்திய சுகாதார அமைச்சகம்

0 1413

ஹோலி, ஈஸ்டர், ஈத் பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தடுக்க, உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசிக்குமாறு மாநில தலைமைச்செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளார்.

இது போன்ற கொண்டாட்டங்களின் போது ஆட்கள் கட்டுபாடு இன்றி கூடுவதை அனுமதித்தால், கடந்த ஒரு ஆண்டு காலமாக, கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகளும், அதனால் கிடைத்த பலன்களும் வீணாகி விடும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments