கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, காவல் ஆணையர் சுமித் சரண் மாற்றம்

கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, காவல் ஆணையர் சுமித் சரண் மாற்றம்
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மற்றும் காவல் ஆணையர் சுமித் சரணை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, அவர்கள் இருவரும் தேர்தல் தொடர்பில்லாத பணிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக நாகராஜன் நியமிக்கப்படுவதாகவும், புதிய காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments