அழையா விருந்தாளியாக திருமண விழாவில் ஆஜரான மன்சூர்..! களைகட்டியது ஆட்டம்
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் அழையா விருந்தாளியாக திருமண விழாவில் புகுந்து ஆட்டம் போட்டதோடு, பேண்டு வாத்திய கலைஞர்களுக்கு பணமும் கொடுத்தார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ள நடிகர் மன்சூர் அலிகான் ஸ்கூட்டரில் சென்று பொதுமக்களுடன் செல்பி எடுத்து வாக்கு சேகரித்தார்
அவருடன் பலரும் போட்டி போட்டு செல்பி எடுத்துக்கொண்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்குள் கூட்டத்தை பார்த்ததும் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்தார்
அவரை கண்டதும் திருமண வீட்டார் உற்சாகமடைந்தனர், அங்கிருந்தவர்களிடம் ஆசிபெற்ற அவர், மணமேடையில் ஏறி மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து திருமணவீட்டாருடன் அமர்ந்து செல்பி எடுத்தவாரே வாக்கு சேகரித்தார் மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகானை பார்த்ததும் ஆட்டமா தேரோட்டமா பாட்டுக்கு பேண்டுவாத்தியத்தை இசைத்த கலைஞர்களுடன் குட்டியாக டான்ஸ் போட்டார்
இறுதியாக இசைக்கலைஞர்களுக்கு 500 ரூபாய் நோட்டை அன்பாக கொடுத்து அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் எனக்கூறிச்சென்றார்
மன்சூர் அலிகானுடன் அவரது மகனும் உடன் சென்று தந்தைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். மன்சூரலிகானின் இந்த யதார்த்த பிரச்சாரம் ஓட்டாக மாறுமா ? என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்..!
Comments